மூன்று வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கம்!

Wednesday, June 21st, 2023

மூன்று வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 2 நிபந்தனைகளும் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பத்திரமொன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் வரிசைகள் ஏற்பட்டதாகக் கூறி மின்சக்தி , எரிசக்தி அமைச்சு Sinopec , R.M.Parks நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது. 

அந்த வகையில் ஒரு நிறுவனம் இலங்கையில் எரிபொருளை விற்று, அதன் மூலம் ஈட்டும் வருமானத்தை, குறித்த எரிபொருள் தொகையை கொண்டு வந்த ஒரு வருடத்தின் பின்னரே நாட்டில் இருந்து வௌியே கொண்டு செல்ல முடியும். அத்துடன், அந்த வருமானத்தை டொலராக மாற்றுவதற்கு 9 மாதங்களின் பின்னரே அனுமதி வழங்கப்படும் என்ற இரு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

அத்துடன் மாதாந்த அடிப்படையில் நாட்டிற்கு கொண்டுவரப்படும் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களின் மொத்த மாதாந்த விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் அமைச்சு அல்லது பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்தால் சேமிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

எவ்வாறாயினும், மே 22 ஆம் திகதி Sinopec உடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்னர், மே 19 ஆம் திகதி இந்த இரண்டு நிபந்தனைகளும் அமைச்சரவை பத்திரமொன்றினால் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106