பழைய எலெக்ரானிக் பொருட்களில் இருந்து தங்கம் எடுப்பது எப்படி?
Monday, September 5th, 2016
குப்பைகளில் வீசப்படும் பழைய எலெக்ரானிக் பொருட்களில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் வழிமுறையை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மொபைல் போன், டிவி உள்ளிட்ட பல எலெட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் டன் கணக்கிலான தங்கம் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை குப்பைகளாக வீசப்படும் போது இவற்றில் உள்ள தங்கங்கள் பிரித்தெடுக்கப்படுவதில்லை.
இவற்றில் உள்ள நடைமுறைகள் மிகவும் சிக்கலாக இருந்த காரணத்தாலே தங்கம் பிரித்தெடுப்பது சாத்தியமில்லாமல் இருந்ததாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்து தங்கத்தை எளிதாகப் பிரித்தெடுக்கும் முறையினை கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் உலகின் தங்க தேவையைச் சமாளிக்க முடியும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், தங்கம் தோண்டியெடுக்கும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் இதன் மூலம் குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106