பாலியல் நாட்டம் வேண்டாம் – பாலியல் இஞ்சமாக மாற்ற வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்து!

Wednesday, June 21st, 2023

உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘பாலியல் நாட்டம்’ எனும் குற்றத்தின் சொற்பதத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.

‘பாலியல் நாட்டம்’ எனும் குற்றத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் ‘நாட்டம்’ என்பதன் மூலம் குற்றம் சிறிதாக்கப்படுகின்றது.

இதற்குப் பதிலாக ‘பாலியல் இலஞ்சம்’ எனும் சொற்பதம் மூலம் குற்றத்தின் தீவிரத்தன்மை   சிறந்த முறையில் காட்டப்படுவதால், அதனை பயன்படுத்துமாறும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘இலஞ்சம் சம்பந்தமாக, இலஞ்சம் வழங்கும் நபர் ஒருவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே இந்த சரத்தின் அடிப்படையில், பாலியல் இலஞ்சம் வழங்கிய நபரும் தண்டிக்கப்படக்கூடும்.

இதனால் பாலியல் இலஞ்சம் வழங்கும் நபருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில்,  விதிவிலக்கொன்றை உள்வாங்குமாறு பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்  கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106