பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி – டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிப்பு!
Tuesday, June 20th, 2023ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்டுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற முடியும் என்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதேநேரம் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அங்குள்ள இலங்கை தமிழர்களால் மத்திய லண்டன் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106