படகு விபத்தில் பாகிஸ்தானியர்கள் 300 க்கும் மேற்பட்ட நீரில் மூழ்கினர்!
Monday, June 19th, 2023ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இழுவைப்படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
பாகிஸ்தான் செனட் தலைவர் மொஹமட் சாதிக் சஞ்சரானி அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், படகில் சுமார் 750 பேர் பயணித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த பாகிஸ்தானியர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதாக நம்பப்படும் 10 மனித கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் கைதாகியுள்ளனர்.
இதேவேளை, குறைந்தது 500 பேரைக் காணவில்லை என்று ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இறந்தவர்களின் எண்ணிக்கையை கிரீஸ் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மீட்புப் பணிகளுக்காக கிரீஸிலிருந்து படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இன்று பாகிஸ்தானில் தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106