தோழர் சந்துருவின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை!
Sunday, June 18th, 2023
தோழர் சந்துரு இராசேந்திரம் இராஜசேகரத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.
தோழர் சந்துரு – இராசேந்திரம் இராஜசேகரம் இன்றையதினம் அகாலமரணமடைந்தார்.
இன்நிலையில் வேலணை அம்பிகை நகரில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தோழர் சந்துருவின் புகழுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்ததுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
மறைந்த தோழர் சந்துருவின் புகளுடலுக்கு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா மற்றும் கட்சியின் வேலணை ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும் தமது அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக அமரர் ராஜேந்திரம் இராஜசேகரம் (சந்துரு) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து, 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தீவகத்தில் மக்கள் நலப்பணிகளை ஆரம்பித்த வேளை அவரது அரசியல் வழிமுறைகளினால் ஈர்க்கப்பட்டு அவரின் அரசியல் பயணத்திற்கு பக்கபலம் சேர்க்க முன்னின்று உழைப்பதற்காக தன்னை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் (ஈ.பி.டி.பி) இணைந்து செயற்பட்ட ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன், தொடர்ந்தும் கட்சி செயற்பாடுகளுக்கு தனது ஒத்துழைப்புளை வழங்கியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கதாகும். – 18.06.2023
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106