தாமரை தடாகத்தை நிர்மாணித்தது முகப்புத்தகத்தில் புகைப்படமெடுத்து பதிவிட அல்ல – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு!
Sunday, June 18th, 2023தாமரை தடாகத்தை நிர்மாணித்தது முகப்புத்தகத்தில் புகைப்படமெடுத்து பதிவிட அல்ல அதனை தொழிநுட்ப துறையில் பாரிய முன்னேற்றத்தை கொண்டுவருவதற்கே என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நுவரெலியவில் இடம்பெற்ற கூட்டமொன்றிக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இந்த நாட்டின் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தோம்.
ஏனெனில் நாட்டில் தொழிநுட்ப துறையில் பாரிய முன்னேற்றத்தை கொண்டு வர முன்வருவார் என நம்பியிருந்த போதும் அவர் அதனை கைவிட்டுவிட்டார்.
ரணில் பதவியிலிருக்கும் காலத்தில் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தியுள்ளார். எனினும் அவர் எமது வளங்களை பாதுகாக்க வேண்டும்.
இந்நிலையில் நாம் நாட்டை அபிவிருத்தி அடைய செய்ய முயற்சிக்கும் போது நாட்டிற்கு இலாபம் இருக்க வேண்டும்.
ஆனால் இலாபம் கிடைக்கும் ஒரு விடயத்தை நாம் விற்று தான் நாட்டை முன்னேற்றமடைய செய்ய முடியும் என்றால் அவ்வாறானதொரு முயற்சிக்கு நாம் ஒத்துழைக்க முடியாது.
சில சமயங்களில் தமது அரச சொத்துக்களை அடகு வைத்து தமது அரசியலை முன்னகர்த்தும் அரசியல் வாதிகளும் எம்மத்தியில் உள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106