159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் இரத்து – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 13th, 2023

சுமார் 159 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண் கட்டளைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டமானது, பாண் விற்பனையை ஒழுங்குபடுத்துவதுடன், விற்பனைக்கு வழங்கப்படும் பாணில் கலப்படம் செய்யப்படுவதையும் தடுக்கிறது.

இந்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் நேற்று (12) கூடிய அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.

பாண் கட்டளைச் சட்டம்? நுகர்வோர் விவகார அதிகார சபையின் 2003ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க கட்டளை சட்டத்தின் சில விதிமுறைகளுடன் முரண்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாண் கட்டளைச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது அவசியமற்றது என அரசாங்கம் அவதானித்துள்ளது.

இந்தநிலையில், பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூல வரைவை தயாரிக்குமாறு சட்ட வரைஞர்களுக்கு அறிவுறுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106