ஒரு இலட்சம் மணிநேரத்தை நிறைவுசெய்தது எயார்பஸ் – பிரான்ஸிடம் மீள ஒப்படைக்கிறது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்!
Tuesday, June 13th, 2023
பிரான்ஸிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட, ஸ்ரீலங்கன் விமான சேவையின் முதலாவது A 330-200 ரக எயார்பஸ் விமானத்தின் குத்தகைக் காலம் முடிவடையவுள்ளது.
அதன்பின்னர் குறித்த விமானம் அதன் சொந்த நிறுவனத்திடம் மீள ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
விமானங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவை 23 வருடங்களுக்கு முன்னர் இந்த விமானத்தை குத்தகைக்கு எடுத்திருந்தது.
ஹீத்ரோ, பிராங்போர்ட், மெல்பர்ன் மற்றும் மொஸ்கோ உள்ளிட்ட நீண்ட இடங்களுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது சுமார் 100,000 விமான மணிநேரத்தை நிறைவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் நிறுவனம் தெரிவித்துள்னளது
இந்த விமானத்தில் 18 வணிக வகுப்புப் பயணிகளும், 251 சிக்கன வகுப்புப் பயணிகளும் பயணிக்கும் வசதி உள்ளது.
இந்த விமானம் இன்னும் சேவை செய்யக்கூடிய நிலையில் உள்ளது, ஆனால் குத்தகை காலாவதியான ஓரிரு நாட்களில் அது பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106