உலக டெஸ்ட் செம்பியன்ஷிப்பை வென்றது அவுஸ்திரேலியா!

Monday, June 12th, 2023

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

லண்டன் – ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 121.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களையும், ஸடீவ் ஸ்மித் 121 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின், மொஹம்மட் சிராஜ் 108 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மொஹம்மட் சமி 122 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாட ஆரம்பித்த இந்திய அணி 69.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக ரஹானே 89 ஓட்டங்களையும், ஷர்துல் தாகூர் 51 ஓட்டங்களையும், ரவிந்திர ஜடேஜா 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் 83 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், கெமரூன் கிரீன் 44 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிரந்தமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106