அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பம்!
Monday, June 12th, 2023
2023 ஆம் ஆண்டு, அரச பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (12) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை தவணை ஆரம்பமாவதையிட்டு நேற்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது
இதேநேரம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கேட்டுக்கொண்டதற்கமைய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது.
அத்துடன் நுளம்பு பெருக்கமுள்ள இடங்களை கண்டறித்து அவற்றை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபடுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவா் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு மாதிரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106