அமைச்சரவை மாற்றம் – ருவான் வெளியிட்ட தகவல் – அமைச்சு பதவி வேண்டாம் என்கிறார் நாமல்!
Sunday, June 11th, 2023
மீண்டும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில் ஜக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
அதாவது உரிய நேரத்தில் உரிய வகையில் அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வாரென ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நவீன் திஸாநாயக்க ஆளுநராக நாளை அல்லது நாளைமறுதினம் பதவியேற்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் அமைச்சுபதவிகளை சலுகைகளையோ பெறப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மீண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தேர்தல் அறிவித்த பின்னர் தீர்மாகிக்கப்படும் என்றும்
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவாரென யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் அதேபோன்று எதிர்காலத்தில் எதுவும் சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106