கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளனர் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Friday, June 9th, 2023கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவற்றில் 75% வாகனங்கள், வங்கிக் கடன் அடிப்படையில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) நாடாபாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதியின் போது வரியை டொலரில் செலுத்துவதற்கான யோசனையை உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2015 முதல் 2020 வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 24 இலட்சத்து 98 ஆயிரத்து 714 ஆகும்.
இதனடிப்படையில் 2015 இல் – 6 இலட்சத்து 52 ஆயிரத்து 446 வாகனங்களும், 2016 இல் 4 இலட்சத்து 66 ஆயிரத்து 986 வாகனங்களும், 2017 இல் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 320 வாகனங்களும், 2018 இல் 4 இலட்சத்து 96 ஆயிரத்து 282 வாகனங்களும், 2019 இல் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 452 வாகனங்களும், 2020 இல் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து ,228 வாகனங்களும் இறக்குதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106