ஆசிரியர் நியமனம் சிக்கலில் – மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன்” கல்வி அமைச்சர் தெரிவிப்பு!!
Friday, June 9th, 20232019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தில் பிரகாரம் நியமிப்பதாகவும் வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும் அதன்படியே நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, இது சிக்கலானதுதான். ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. எனினும் மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்த கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில் -.
ஆசிரியர் கலாசாலைகள், கல்வியியல் கல்லூரிகளிலிருந்து மெரீட், மாவட்ட அடிப்படையில் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் வெளிமாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு வழங்கப்படும் 37 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வெளிமாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் இவர்களினால் போக்குவரத்து, தங்குமிட வாடகை, உணவுச் செலவு போன்றவற்றை எப்படி சமாளிக்க முடியும்? எனவே அவர்களை வடக்கு மாகாணத்திலேயே நியமிக்க முடியாதா?” என்று ஸ்ரீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர்,
“2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டனர். கொரோனா
நெருக்கடியினால் ஆசிரியர் நியமனங்கள் தாமதமான நிலையில் விரைவில் இவர்களில் 7, 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளோம்.
இவர்களுக்கான நியமனங்களை வர்த்தமானி அறிவித்தலில் அடிப்படையிலேயே வழங்க வேண்டியுள்ளது.
அதனால்தான் ஒரு மாகாணத்தில் உள்ளவர்கள் இன்னொரு மாகாணத்துக்கு நியமிக்கப்படுகின்றனர். இது சிக்கலானதுதான். ஆனால் தவிர்க்க முடியாதது. எனினும் நான் ஏதாவது மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106