நியூசிலாந்து முன்னாள் பிரதமருக்கு இளம் வயது பெண் உயரிய விருது!
Tuesday, June 6th, 2023
நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டன். 2017ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார்.
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் திடீரென்று அறிவித்தார்.
இது நியூசிலாந்து மக்கள் மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் ஜசிந்தா ஆர்டன் நியூசிலாந்தின் 2ஆவது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கௌரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜசிந்தா ஆர்டன் கூறும்போது,
‘இந்த விருதை ஏற்றுக்கொள்வது பற்றி நான் இரண்டு மனதாக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும். இது எனது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும்’ என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106