மன்னார் வளைகுடா கடலில் அழிவின் விளிம்பில் டொல்பின்கள் – வெளியானது அதிர்ச்சி தகவல்!
Tuesday, June 6th, 2023
மன்னார் வளைகுடாவில் ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் டொல்பின்கள் அழிவின் விளிம்பில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மன்னார் வளைகுடாவில் தனுஷ்கோடி முதல் ரோஜ்மா நகர் வரையிலான ராமநாதபுரம் மாவட்டத்தின் நீண்ட நெடிய கடற்கரைப்பகுதி 130 கி.மீ.,க்கு பரந்து விரிந்து காணப்படுகிறது.
இது அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கிறது. இயற்கை பாதுகாப்பு அரணாக கடல் பவளப்பாறைகள் (கோரல்ஸ்) காணப்படுகின்றது. மண்டபம், கீழக்கரை, சாயல்குடி வனச்சரகத்தில் 21 தீவுகள் உள்ளன.
மன்னார் வளைகுடா பகுதியில் தீவுகளை ஒட்டிய இடங்களில் அரியவகை டொல்பின்கள் காணப்படுகின்றன. ஒரு சில தடை செய்யப்பட்ட வலைகளை விரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள மீனவர்களால் டொல்பின்கள் அழிவை சந்திக்கின்றன.
இயற்கை வளம் பாதுகாக்கும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ சுருக்கு மடி, இழுவை மடி, கரைவலைகளை கடலுக்குள் மற்றும் தீவிற்கு மிக அருகில் விரிப்பதால் சிறு மீன்களை மட்டுமே உண்டு வாழும் டொல்பின்கள் கூட்டமாக வந்து வலையில் மாட்டிக்கொண்டு இறக்கின்றன.
டொல்பின்களின் மகத்துவத்தை அறிந்த சில மீனவர்கள் அவற்றை மீண்டும் கடலுக்குள் விடுகின்றனர்.
அதை உணராதவர்களால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமை, கடல் பசு, டொல்பின்களின் பெருக்கமும், வாழ்விடங்களும் அழிவை சந்திக்கின்றன.
கடந்த பத்தாண்டுகளில் 100க்கும் மேற்பட்ட டொல்பின்கள் வலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.
எனவே இதுகுறித்த விழிப்புணர்வை மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106