பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை ‘வலுவான அர்ப்பணிப்பை’ காட்டி வருகின்றது – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பாராட்டு!

Friday, June 2nd, 2023

பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை ‘வலுவான அர்ப்பணிப்பை’ காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தமது விஜயத்தின் போது அவர் இதனை தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் இந்த வேகத்தை இலங்கை அரசாங்கம் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கையின் கடனாளிகளுடனான தொடர்ச்சியான வெளிப்படையுடன் கூடிய உரையாடல் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை அடைய உதவும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106