எரிபொருட்களில் விலைகளில் சாதகமான மாற்றம் – எரிபொருள் அமைச்சு அறிவிப்பு!

Thursday, June 1st, 2023

மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய கடந்த 31. ஆம் திகதி நள்ளிரவுமுதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லிட்டருக்கு ரூ.15 வால் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாயாகும்.

இதேபோன்று லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 இன் விலை 20 ரூபாய்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் பெற்றோலின் புதிய விலை 385 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது

மேலும் லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் புதிய விலை 340 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.. அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 245 ரூபாயாகும். இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் (Industrial Kerosene) ஒரு லீற்றர் 60 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது

இதன்படி, இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 270 ரூபாயாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், லங்கா IOC நிறுவனம் CEYPETCO எரிபொருட்களின் விலைக்குறைப்புக்கு ஏற்ற வகையில் தனது விலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106