யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஐவர் கொண்ட விசேட குழு நியமனம்!

Wednesday, May 31st, 2023

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில்  ஆராய வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற நிலையில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவிகே சிவஞானம் யாழ் மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானம் ஒன்று கிடப்பில் கிடப்பதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் வடக்கு மாகாண சபையின் அவை தலைவர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர் பிரதமர் செயலாளர், நீர்பாசன பொறியியலாளர்  களப்பணிப்பாளர் உட்பட ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழ  நீர் விநியோகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதோடு நாளைமறுதினம் முதலாவது கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106