நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுக்க ஜனாதிபதி உத்தரவு !
Tuesday, May 30th, 2023
நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு தரப்பினரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்கள் தொடர்பில் சில புலனாய்வு தகவல்கள் ஜனாதிபதிக்கு ரணில் விக்ரமசிங்கவிக்ரு கிடைத்துள்ளது.
இனக்கலவரங்கள் மற்றும் ஏனைய பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்ற வகையில், வன்முறையை தூண்டும் நபர்களை தடுக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென அவர்கள் கருகின்றனர்.
அனைத்து சமூகங்களும் இணைந்து வாழ்வதற்கான அமைதியான சூழலை உறுதிசெய்ய தேவையான உத்தரவுகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106