வெளிவிவகார அமைச்சர் ஸ்லோவேனியா பயணம்!
Sunday, September 4th, 2016
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்லோவேனியா நாட்டுக்கு செல்லவுள்ளார்.
இன்று ஸ்லோவேனியா செல்லவுள்ள அவர், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்லேவேனியா துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர், அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

Related posts:
இலங்கை - கம்போடிவிற்கிடையில் வர்த்தக சந்திப்பு!
விளையாட்டுகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க வருகிறது புதிய சட்டம் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்காதவகையில் வைரஸை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் - அமைச்சர் நாமல் ராஜப...
|
|
|


