சீனாவில் தயாரானது பயணிகள் விமானம் – முதல் வணிகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது!
Monday, May 29th, 2023
சீனா, முதல் தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் ஜெட் தமது முதல் வணிகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
சீனாவின் தலைநகர் பீய்ஜிங்கை நோக்கி, சி – 919 என்ற குறித்த விமானம் ஷாங்காயில் இருந்து புறப்பட்டு சென்றது.
எயார் பஸ் மற்றும் போயிங் கின் ஒற்றை இடைகழி ஜெட் விமானங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நம்பிக்கையில் இது சீனாவின் கொமர்ஷியல் ஏவியேஷன் கோர்ப்பரேஷனினால் தயாரிக்கப்பபட்டுள்ளது.
எனினும் இயந்திரங்கள் உட்பட்ட சில விடயங்களில் இன்னும் மேற்கத்திய கூறுகளை சீனா பெரிதும் நம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்காய் – பீய்ஜிங் நோக்கிய இந்த விமானப் பயணம், 130க்கும் மேற்பட்ட பயணிகளுடன், மூன்று மணி நேரத்திற்குள் நிறைவுப்பெற்றது.
இந்தநிலையில் கோமாக் – ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 150 விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
எனினும், இதில் பெரும்பாலானவை உள்நாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த கோரல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106