2024ல் 5 இலட்சம் சீனர்களை இலக்குவைக்கின்றது இலங்கை – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவிப்பு!
Tuesday, May 23rd, 2023
இலங்கை கடன்நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக சீனாவை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
2024 இலங்கை அரைமில்லியன் சீன சுற்றுலாப்பயணிகளை இலக்குவைத்துள்ளது என சீனாவில் தெரிவித்துள்ள ஹரீன் பெர்ணாண்டோ இது கொவிட்டிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சீனா சுற்றுலாப்பயணி ஒருவர் 5000 டொலர் செலவு செய்தாலும் அது சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து சமீபத்தில் கிடைத்த நிதி உதவிக்கு சமன் என ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையால் இலங்கையை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் வரை சீனாவிலிருந்து இலவச சுற்றுலா விசாவை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹரீன்பெர்ணான்டோ அவர்கள் சீன கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு வரமுடியும் எனகுறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் சீன விமான சேவைகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106