கடத்தல்காரர்களே அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கின்றார்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Thursday, May 18th, 2023

தற்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கு கடத்தல்காரர்கள் விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசை சீர்குலைக்க பாடுபடும் அனைவரையும் பயங்கரவாதிகளுக்கு சமமாக கையாள வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.என்ன கலந்துரையாடப்பட்டது? என ஊடகவியலாளர்கள் கேட்டபோது  –

அதிகாரப் பகிர்வு மற்றும் 13 ஆவது அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தற்போதுள்ள 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடி முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி முன்மொழிந்தார்.

மேலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய சட்டச் சிக்கலால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினையை தீர்க்க பிரதமருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முடிந்தால் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறார்.? என கேட்கப்பட்டதற்கு –

தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைக் கூட பாதுகாக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கு சவால் விடுவது வேடிக்கையானது. தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை வைத்துக்கொண்டால், எதிர்க்கட்சித் தலைவருக்கு ஹீரோவாக சவால் விடலாம். என தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் பதவி மீண்டும் மாறும் என வதந்திகள் பரவி வருகின்றன. இது உண்மையா? என கேட்கப்பட்டதற்கு

அரசாங்கத்தில் அவ்வாறான பேச்சுக்கள் இல்லை தினேஷ் குணவர்தன கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க அணியினரால் நியமிக்கப்பட்டார்.அந்த நிலைப்பாட்டை மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. இப்படி ஒரு கதையை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன. எங்களுக்கு பிரதமர் பதவி கொடுத்தால் அதை எடுப்போம் என்கிறார்கள். அதற்கு அரசு உடன்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆளுநர்களை நீக்க முடிவு செய்தது ஏன்? என கேட்கப்பட்தற்கு

ஆளுநர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். தற்போதைய ஆளுநர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டவர்கள். தற்போதைய ஜனாதிபதி தாம் நம்பி செயற்படக்கூடிய குழுவொன்றை நியமித்து செயற்படுவார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி படித்த மற்றும் புத்திசாலிகளை ஆளுநர் பதவிகளுக்கு நியமித்தார். அவர்களுடன் வேலை செய்ய முடியாதா? என கேட்கப்பட்டதற்கு

அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மக்கள் கூறுவார்கள். அந்தப் பதவிகளை நியமிக்கும் போது அரசியல் பொறிமுறையைப் பற்றிய புரிதல் உள்ளவர்களையே பதவியில் அமர்த்த வேண்டும். பொதுமக்களுக்காக அரசு இயந்திரம் ஒருங்கிணைக்கப்படும் இடமாக ஆளுநர் பதவியை பார்க்கிறேன். மாகாண சபைகள் இல்லாத காரணத்தினால் மாகாண அமைச்சர்களின் பொறுப்பு ஆளுநர்களிடமே உள்ளது.

இதேவேளை தேர்தலை சந்திக்க அரசாங்கம் தயாராக உள்ளதா? என கேட்கப்பட்டதற்கு

நாங்கள் தயார். மகிந்த போரில் வெற்றி பெற்றது போன்று ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவார் என்ற கருத்து நாட்டு மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஜனாதிபதி சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நயவஞ்சகர்கள் அதை ஏற்க மாட்டார்கள். தற்போதைய ஜனாதிபதிக்கு சல்யூட் அடிக்கலாம் என்று சரத் பொன்சேகா கூறுகிறார். இன்று ஜனாதிபதியைச் சுற்றி ஏராளமானோர் குவிந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106