இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் – உலக உணவுத் திட்டம் தகவல்!

Thursday, May 11th, 2023

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்துள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் 2022 ஆம் ஆண்டில் உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.

1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் 2022 இல் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.

தொடர்ச்சியான வறட்சி, வெளிநாட்டு கையிருப்பு, அரசியல் கொந்தளிப்பு, உயர் பணவீக்கம் மற்றும் அதிகரித்த பொதுக் கடன் போன்ற பல காரணிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

2019 இல் உணவுப் பாதுகாப்பின்மை 10 சதவீதமாக இருந்த ஒரு நாட்டிற்கு இது ஒரு வியத்தகு தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது என அறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106