யாழ் .குடாநாட்டின் சிலவிடங்களில் இன்று மின்தடை!
Sunday, September 4th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை(04) யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி இன்று காலை-08.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை உடுவில், மருதனார்மடம், ரொட்டியாலடி,அம்பலவாணர் வீதி,பெரிய மதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, இணுவில், சங்குவேலி, பிப்பிலை, கட்டுடை, உப்புமடம், தாவடிச் சந்தி, பத்தனை, மாப்பியன், சுதுமலை ,மானிப்பாய்,சீரணி, சண்டிலிப்பாய், ஆலங்குளாய், கந்தரோடை, அளவெட்டி, மாகியப்பிட்டி, யாழ். நுண்கலைப் பீடம் ஆகிய இடங்களிலேயே இவ்வாறு மின்சாரம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றின் அபாயம் இன்னமும் நீங்கவில்லை – மக்கள் எச்ச...
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரை ஊடகத்துறை அமைச்சரால் வெளியீடு!
|
|
|


