யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றின் அபாயம் இன்னமும் நீங்கவில்லை – மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை!
Monday, April 20th, 2020
யாழ் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றின் அபாயம் இன்னமும் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்
யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் குறித்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
கொரோனோ வைரஸ் தொற்றில் இதுவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவரும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களில் 16 பேருமாக இதுவரையில் 17 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனைகளில் இனங்காணப்பட்டுளள்ளது.
இவ்வாறு தொற்று உறுதிப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்களில் 4 பேர் குணமடைந்த நிலையில் தற்போது தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் நால்வரும் அரியாலையப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களது விடுகளுக்கே நேற்று அனுப்பி வைக்கப்பட்டு தொடர்ந்து 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல யாழ்ப்பாணத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற மேலும் சிலரும் குணமடைந்து வருகின்ற நிலையில் அவர்களும் விரைவில் வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் யாழ்ப்பாணத்தில் தற்போது சமூகத்திற்குள் இருந்து தொற்று பரவவில்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனோ ஆபத்து நீங்கிவிட்டதாக கருத முடியாது என தெரிவித்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கின்ற நிலையில் சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும் அதனுாடாகவே தொற்று ஏற்படுவதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்றும் வலியுறுத்தியுள்ளார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106