கிழக்கு மற்றும் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு ஆரம்பம் – இரு தினங்கள் தொடரும் எனவும் தெரிவிப்பு!

Thursday, May 11th, 2023

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நிலையான தீர்வனை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த பேச்சுவார்த்தை நாளையும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றைய முதல் நாள் சந்திப்பின்போது, நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணி விவகாரம் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட உள்ளன.

அதேநேரம், நாளை நடைபெறவுள்ள சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்புக்கு முன்னதாக கடந்த 9 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது,.

முன்னதாக மூன்று நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்றும் நாளையும் மாத்திரம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106