அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!
Monday, May 8th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச பணியாளர்களுக்கு, மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த அரச பணியாளர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் மீண்டும் பணிக்குத் திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (8) வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதியிலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து, அருகிலுள்ள வேறு தொகுதிகளில், இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106