நவீன உலகத்துக்கு ஏற்றவாறு விரைவில் புதிய தொழில் சட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!
Friday, May 5th, 2023
பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்துக்குப் பதிலாக, நவீன உலகத்துக்கு ஏற்பவும், தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2048 ஆம் ஆண்டில் வெற்றி பெறுவோம் என்ற ஜனாதிபதியின் தொலை நோக்குடன், நாட்டின் அபிவிருத்தி இலக்குகள் எட்டப்படவுள்ளன. இதற்கேற்ப இந்தச் சட்ட கட்டமைப்புக்கு தொழில் சங்கங்கள், புத்திஜீவிகள் சமூக அமைப்புக்கள், தொழில் சங்கங்களில் அங்கத்துவம் வகிக்காதவர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்கள், ஆலோசனைப் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டம் குறித்து நாம் குறிப்பிட்ட போது, வழமை போன்றே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் குறை கூறினர். இவர்கள், எப்பொழுதும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதாகவும் அமைச்சர் கூறினார்.
தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன் அவர்களின் கௌரவத்தையும் பாதுகாத்து, சர்வதேச தொழில் அமைப்பு ஏற்றுக்கொள்ளக்கொள்ளக்கூடிய புதிய தொழில் சட்டத்தை உருவாக்குவதுடன் தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் பாதுகாப்பு அவர்களின் உரிமை, விசேட தேவைகளை கொண்டுள்ளவர்களின் உரிமையை உறுதி செய்வதும் எமது நோக்கமாகும்.
இதேவேளை மே தினத்தில் மாத்திரம் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் எழுப்பாது, அவர்களின் நீடித்த நலனை இலக்காகக் கொண்டு, செயல்படுவதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106