சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் நவீன முறைமை – தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, May 4th, 2023

சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்குரிய மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நவீன நடைமுறை மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மேலதிக செலவீனத்தை குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ உடல் மற்றும் மனநிலை தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் 26 அலுவலகங்களையும் ஒன்றிணைக்கும் புதிய டிஜிட்டல் முறையை உருவாக்கி, அதன் மூலம் ஒவ்வொரு தனிநபரின் மருத்துவச் சான்றிதழையும் நேரடியாக இனைக்கக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மருத்துவச் சான்றிதழ் பெறவுள்ளவர்களுக்கு மறைக்குறியீடு மூலம் சான்றிதழைக் வழங்கி, அந்த மறைக்குறியீட்டை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த பிறகு, அவர்களின் சேவை செய்யப்படும் வகையில் குறித்த முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முறைமையை இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மோட்டார் போக்குவரத்து திணைக்கள அமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் டி.குசாலானி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106