இரு ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
Thursday, May 4th, 2023
அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய பெறுகை ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த ஆணைக்குழுவின் தலைவராக டபிள்யூ. சுதர்மா கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய ஐவன் திசேரா, டி. பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து மற்றும் ஏ.ஜி. புபுது அசங்க குணவங்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் கீழ், நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுமித் அபேசிங்க (தலைவர்), துவான் நலின் ஓசேன் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோரே குறித்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
ஊர்காவற்றுறையில் கேரள கஞ்சா மீட்பு!
வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு - பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது!
சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் - சர்வதேச நாணய நிதியத்தின...
|
|
|


