நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்து – அறுவருக்கு காயம்!
Wednesday, May 3rd, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிஃபென்டர் ரக வாகனம் சிறிய பாரவூர்தியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வாரியபொல நகரில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பான நேற்று இரவு 9.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த டிஃபென்டர் வாகனம் அதிவேகமாக பயணித்ததன் காரணமாக முன்னால் சென்ற சிறிய பாரவூர்தியுடன் மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பாரவூர்தியில் பயணித்த 5 பேரும், நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106