செக் குடியரசின் அதிபர் இலங்கை வருகை!
Saturday, September 3rd, 2016
செக்குடியரசின் தலைவர் மிலோஸ் சைமன் (Miloz ziman) அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
செக்குடியரசின் தலைவரால் இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ப்ரியாணி விஜேசேகரவிடம் இந்த தகவலை அவர் அறிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் அவர் இலங்கை வரவுள்ளார்.
அத்துடன் செக்குடியரசின் மக்கள் இலங்கைக்கான சுற்றுலா பிரயாணத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், செக்குடியரசின் ப்ராக் பிரதேசத்தில் இலங்கை தூதரகம் ஒன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
மோட்டார் சைக்கிள் விபத்து - படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாதங்களின் பின்னர் சிகிச்சை பலன...
5 ஆம் திகதிமுதல் மீண்டும் விலை குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயு - எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறி...
|
|
|


