மோட்டார் சைக்கிள் விபத்து – படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Tuesday, September 27th, 2022

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமைப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் வேலையை முடித்துக்கொண்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஊரெழு பகுதியில் விபத்துக்கு உள்ளானார்.

விபத்துக்கு உள்ளவரை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் , கடந்த மூன்று மாத கால பகுதியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106