அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக மக்களும் ஒன்றிணைய வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
Saturday, April 29th, 2023
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப முன்வரும் எந்தவொரு தரப்பினருக்கும் எமது ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளோம். எனவே மக்களும் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில் –
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அவ்வாறன்றி அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியாவிட்டால் நாம் குறித்து சிந்திப்போம்.
இந்த சந்தர்ப்பத்தில் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்வரும் எவருக்கும் நாம் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம்.
நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய எந்தவொரு தரப்பினருக்கும் ஆதரவளிப்போம். எனவே மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106