71 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இலவச யூரியா உரத்தை வழங்குகிறது விவசாய அமைச்சு !

Friday, April 21st, 2023

ஏழு மாவட்டங்களில் உள்ள 71,000 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகளை விவசாய அமைச்சு விநியோகிக்க உள்ளது.

யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை அமைச்சிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வின் போதே ஹம்பாந்தோட்டை பட்டா அத்தா விவசாய பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் லு ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் இந்த இலவச யூரியா உரத்தை பெற தகுதியுடையவர்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (UNFAO) அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் நாளை (22) விவசாய அமைச்சுக்கு வழங்கவுள்ளன.

அதிக விளைச்சலை பெற புதிய செய்கை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாராசூட் நெல் செய்கை முறையை ஊக்குவிக்க நெல் விவசாயிகளுக்கு உயர்தர விதைகளை வழங்க தேவையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106