விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் – 2022 உயர்தர மாணவர்களின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Friday, April 21st, 2023

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களினால், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குறித்த பெற்றோர்கள் குற்றம் சுமத்தி இந்த முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2022ஆம் கல்வி ஆண்டின், 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவர்களை 06ஆம் தரத்திற்கு பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான, மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 8ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரையில், இணையத்தள முறைமையில், மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பாடசாலைகள் தொடர்பான அட்டவணையைப் பார்வையிடவும், மேன்முறையீட்டை முன்வைக்கவும், www.moe.gov.lk என்ற தமது இணையத்திற்கு பிரவேசிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106