வெப்பக் குறியீடு உச்ச மட்டத்தில் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!!

Wednesday, April 19th, 2023

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல் மற்றும் மொனராகலை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதில் குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106