ஏப்ரல் 20 முதல் சமய நிகழ்வுகள் தவிர்ந்த காலி முகத்திடலில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை – ஜனாதிபதியின் 8 யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, April 18th, 2023

எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த, காலிமுகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலி முகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பெருநிறுவன சமூகப் பொறுப்பு  (CSR) கருத்திட்டமாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக குறித்த அதிகாரசபை ரூ. 220 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது. கடந்த போராட்ட காலங்களில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க மாத்திரம் 6.6 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுதந்திரமாகப் பொழுதைக் கழிப்பதற்கு இயலுமாகும் வகையில் இத்திடலைப் பயன்படுத்த வேண்டியிருப்பினும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடும் வேறு பல செயற்பாடுகளால் இத்திடல் தொடர்ந்து சேதமடைவதுடன், இச்சுற்றுச்சூழலின் அழகையும், எழில் மிகுந்த தோற்றத்தையும் பேணிச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106