எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் – அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, April 18th, 2023

எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

குறிப்பாக கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண்ணில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்கள் வெப்பத்தினால் பாதிக்கப்படலாம், சோர்வு மற்றும் வெப்பம் அல்லது வெயிலில் தொடர்ந்து செயற்படுவது வெப்ப தாக்கத்திற்கு வழிவகுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் நீரேற்றமாக இருக்கவும், ஓய்வெடுக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“வெளிப்புற தொழிலாளர்கள் தங்கள் கடினமான செயற்பாடுகளை குறைக்கவும், நிழலைக் கண்டறியவும், நீரேற்றத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் எச்சரிக்கை பிரதேசங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெப்ப குறியீட்டு முன்னறிவிப்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மனித உடலில் உணரப்படும் நிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106