591 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது இலங்கை அணி!

Monday, April 17th, 2023

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெற்றுவருகிறது.

நாணய சுழற்சியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி,  முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இரண்டாம் நாளான இன்று தமது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 131 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 591 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டுவந்தது.

இன்றைய நாளில் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் சதங்களை பெற்றதோடு, இறுதி வீரர்களாக களத்தில் இருந்தனர்.

இந்தநிலையில், இலங்கை அணி சார்பில், அதன் முதல் இன்னிங்ஸில் நால்வர் சதம் பெற்றுள்ளனர்.

நேற்றைய நாளில், திமுத் கருணாரத்ன (179) மற்றும் குசல் மெண்டிஸ் (140) ஆகியோர் சதங்களை பெற்றனர்.

இரண்டாம் நாளான இன்று தினேஷ் சந்திமால் (102*) மற்றும சதீர சமரவிக்ரம (104*) சதங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்தின் கார்டஸ் கெம்பர் 84 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றயிருந்தமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106