தகவலறியும் உரிமைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை – நீதி அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, April 11th, 2023

தகவல் அறியும் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சரத்துகள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட தரவுகளை கண்காணிக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் தனியாக எந்த சரத்தும் உருவாக்கப்படவில்லை.

தற்போது குற்றச் செயற்பாடுகள் மற்றும் கொலை சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்களின் போது நீதிமன்ற அனுமதியுடன் தொலைபேசி தரவுகளை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் உள்ளது.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் உலக நாடுகள் பலவற்றிலும் சட்டமாக உள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106