இலங்கை 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் – நிபுணர்கள் கருத்து!
Monday, April 10th, 2023
இலங்கை 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது, இலங்கையின் கையிருப்பு சில நாட்களில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக இருந்தது மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதியை விடுவிக்க மத்திய வங்கி போராடியது.
எவ்வாறாயினும், கடந்த சில மாதங்களில், நிலைமை கணிசமான அளவில் மேம்பட்டுள்ளதுடன், மார்ச் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் 2.7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மூன்று மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான தொகைக்கு சமமான 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கையிருப்பில் இலங்கை வைத்திருக்க வேண்டும் என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
கையிருப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், துறை சார்ந்த வல்லுனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், வெளிநாட்டு கையிருப்பை 6.5 பில்லியன் டொலருக்கும் அதிகமாக அதிகரிக்குமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106