தீர்க்கமான ரி20 இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி!
Sunday, April 9th, 2023
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரின் இன்றைய தீர்க்கமான இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்தின் குயீன்ஸ்டவுனில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்போது, பெத்தும் நிசங்க 25 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலும், குசல் மென்டிஸ் 73 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதேவேளை, குசல் பெரேரா 33 ஓட்டங்களையும், தசுன் சானக்க 15 ஓட்டங்களையும், சரித் அசலங்க 3 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்ஜய டி சில்வா 20 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஒரு பந்துவீச்சு மீதமிருக்கையில் 6 விக்கட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இதன்போது, ரிம் செய்ஃபெட் 88 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக அணிக்குப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் லஹிரு குமார 38 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106