புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – நள்ளிரவுமுதல் நடைமுறைக்கும் வந்தது!
Wednesday, April 5th, 2023
சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த (4) நள்ளிரவுமுதல் இந்த தீர்மானம் நடைமுறைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புக்களை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவுசெய்து பெற்றுக் கொண்டுள்ளது.
எனவே, எவ்வித சிரமமுமின்றி இந்த தீர்மானத்தை அமுல்படுத்த முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு வாரத்திற்கு முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரிலிருந்து 8 லீற்றராகவும், உந்துருளிகளுக்கு 4 லீற்றரிலிருந்து 7 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகளுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், பாரவூர்திகளுக்கு 50 லீற்றரிலிருந்து 25 லீற்றராகவும், சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் வேன்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106