மேலும் 3 மாதங்களுக்கு பொலிஸ் மா அதிபராக சீ.டி. விக்ரமரத்ன – ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்!
Wednesday, April 5th, 2023
பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நியமனம் 2023 மார்ச் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஏப்ரல் 01 ஆம் திகதி கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம் மற்றும் கபீர் ஹாசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத கலாநிதி பிரதாப் ராமானுஜம், வைத்தியகலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106