உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிப்பு!
Tuesday, April 4th, 2023
உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக நரேந்திர மோடி திகழ்வதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில், அந்தந்த நாடுகளில் அவரவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தொடர்பாக சர்வதேச ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
கடந்த மார்ச் 22 முதல் 28 வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்தவர்களிடம் இந்த கருத்துக் கணிப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் 22 தலைவர்களின் பட்டியலை மார்னிங் கன்சல்ட் வரிசைப்படுத்தி உள்ளது.
அதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீத ஆதரவுடன் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார்.
அவரது முடிவுகள் ஏற்கத்தக்கவை என 76 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கத்தக்கவை அல்ல என 19 சதவீதம் பேர் குறிப்பிட்டுள்ளனர்.
5 சதவீதம் பேர் தெரியாது அல்லது கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் மெக்ஸிகோ அதிபர் ஆன்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் ஆபரடோர் உள்ளார். இவர் 61 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.
மூன்றாவது இடத்தை அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் பெற்றுள்ளார். இவர் 55 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.
53 சதவீத ஆதரவுடன் ஸ்விட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 41 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.
இவருக்கு அடுத்த 9ஆவது இடத்தை கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பிடித்துள்ளார். இவருக்கு 39 சதவீத மக்கள் ஆதரவும், 54 சதவீத மக்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
10ஆவது இடத்தை 34 சதவீத ஆதரவுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பெற்றுள்ளார். 21ஆவது இடத்தை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் பிடித்துள்ளார். இவருக்கு 22 சதவீத ஆதரவும், 74 சதவீத எதிர்ப்பும் பதிவாகியுள்ளது.
கடைசி இடமான 22ஆவது இடத்தை தென் கொரிய அதிபர் யோன் சியோக் யோல் பெற்றுள்ளார். இவருக்கு 19 சதவீத ஆதரவும், 73 சதவீத எதிர்ப்பும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106