அமெரிக்கா டொலருக்கு நிகராக ரூபா பெறுமதி இன்று உயர்வு!
Monday, April 3rd, 2023
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (31) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318. 27 ரூபாவிலிருந்து 316.75 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
அத்துடன், அதன் விற்பனை விலை 336.01 ரூபாவிலிருந்து 334.20 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபா பெறுமதி இன்று சற்று உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பலாலி பொலிஸ் நிலையம் மீண்டும் மீள்குடியேற்ற பகுதிக்கு!
இந்தியாவின் கள ஆய்வு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!
ரணிலுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்ப...
|
|
|


