பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு – ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி!

Sunday, April 2nd, 2023

பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி காவல்துறைமா அதிபர் சீ.டி விக்ரமரத்ன தமது 60ஆவது வயதில் ஓய்வு பெறவிருந்தார். எனினும் அவருக்கு மேலும் 3 மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எல்லை நிர்ணய ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பிலும் அரசியலமைப்பு பேரவையில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுயாதீன ஆணைக்குழுவில் உறுப்பினராக இணைந்துக்கொள்ள விரும்புவோர், விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பத்திரிகை விளம்பரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்டதக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106